என்னவள் காதலுக்கு கவிதாஞ்சலி
மழைத்துளிகளில் உன் நினைவுகளை தழுவி பொழிகிறது என் காதல்…
கவிதைகளை படிக்க →கதிரவனின்றி ஒளியில்லை..
ஒளியின்றி உலகில்லை..
உலகின்றி உயிரில்லை..
உயிரின்றி உணர்வில்லை..
என் கதிரவனாய்.. ஒளியாய்.. உலகாய்.. உணர்வாய் ஆன
நீயின்றி நாம் இல்லை… என் காதல் மனைவியே..
— மழைக்காதலன்
Collections
சிரித்துக் கொண்டே வீழ்த்தி விட்டாய் என்னை… வீழ்ந்து விட்டேன் நான் — உன் கண்ணகுழியில்!!!
படிக்க → 02கடலினில் தொலைந்த நதியாய் உன்னுள் தொலைந்த என்னை தேடுகிறேன்…
படிக்க → 03இருளின் சிறையில் நிலவுபோல் நிலவின் சிறையில் இருள் உன் விழிகள்…
படிக்க → 04கார்கால பின்னிரவில். . புதிதாய் குளித்த சாலை தன்னில். . அன்பேனும் குடையின் கீழ். .
படிக்க → 05தன் நிழல் கொண்டு உன் நிழல் மறைப்பாள் காதலாய்! உன் விழி கொண்டு உலகம் காண்பாள் மனைவியாய்!!!
படிக்க → 06ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்தேன். . அன்பே.. உனக்காக காத்திருக்கும் இந்த ஒரு நொடிக்காக. . .
படிக்க → 07காதலே. . உன் கருவறையில் உயிர் தரிக்க கல்லறையைக்கூட காணத்துணிகிறேன். . .
படிக்க → 08துளித்துளியாய் உன் நினைவைத் தழுவி பொழிகிறது கார்மழை.. என்னவளே…
படிக்க → 09நொடிக்கொருமுறை அழகாய் பூக்கின்றன உன் மதுமலர் இதழ்கள்…
படிக்க → 10ரோஜா இதழ்களைக் கூட பறிக்காத நீ எப்படி பறித்தாய் என் இதயத்தினை…
படிக்க → 11உன்னை அடைய உருகிய கார்முகில்கள் மாய்த்துக்கொண்டன இந்த மண்ணில்… மழைத்துளிகளாய்…
படிக்க →கார்காலம்… நிசப்தமான பின்னிரவு…
எங்கும் அடைமழையின் பாதச்சுவடுகள்…
மழைத்துளிகளின் இன்னிசை கானம்…
இவை அனைத்திலும் மனம் செலுத்தாமல்…
என்னவளுக்காக ஏங்கும் நான்…
வருடங்கள் பல காத்திருந்து… மாதங்கள் பல நேசித்து… வாரங்கள் பல அளவளாவி…
❤நொடிகளில் மூன்று முடிச்சிட்டு… யுகங்கள் பல ஒன்றாய் வாழ… கரம் பிடித்தேன் உனை நான்…
❤காலையில் பூத்த மலராக நீ.. உன் மீது உறைந்திருக்கும் பனித்துளியாக நான்…