மழைத்துளிகளில் உன் நினைவை தழுவிபொழிகிறது என் காதல்…கதிரவனாய் நீ… ஒளியாய் நீ…உலகாய்… உணர்வாய்… உயிராய் நீ…நீயின்றி நாம் இல்லை…நாம் இன்றி நானில்லை…என் காதல் மனைவியே…
கணவன் — முதல் சரணம்
♬ கணவன் — Husband
சிரித்துக் கொண்டே வீழ்த்தி விட்டாய் என்னை…வீழ்ந்து விட்டேன் நான் —உன் கண்ணகுழியில்…சூரியனோ உன் விழிகள்…உருகியதென் இதழ்கள்…பறவைகளின் சிறகுகளாய் படபடக்கின்றன என் இதயம்…பட்டொளி வீசும் பௌர்ணமி இரவில்…பெய்து ஓய்ந்த மழைச்சாரலில்…உன் பூவிதழ் தீண்ட காதல் கொண்டேன் உனை…
❤ ✦ ❤
♬ இருவரும்
மழைத்துளிகளில் உன் நினைவை தழுவிபொழிகிறது என் காதல்…நீயின்றி நாம் இல்லை…என் காதல் மனைவியே…
மனைவி — இரண்டாம் சரணம்
♬ மனைவி — Wife
நிலவில் இரு கயல் மோத கண்டேன்…உன் விழிகளாய்…தொலைதூர நிலவும் கவர்ந்து செல்லும் என்பதனாலே…உன்னை சிறைவைத்தேன் —என் விழிகளாய் இமைகளுக்குள்…இருள் உன்னை சூழ்வது கண்டு ஒளி வீசுவாள் அன்னையாய்…தன் நிழல் கொண்டு உன் நிழல் மறைப்பாள் காதலாய்…உன் விழி கொண்டு உலகம் காண்பாள் மனைவியாய்…
அனுபல்லாவி
♬ இருவரும் — Together
ஒளியின் பயணம் விழிகளைத் தேடி…இரவின் பயணம் விடியலைத் தேடி…நதியின் பயணம் கடலினைத் தேடி…என் உயிரின் பயணம் உன் அன்பினைத் தேடி…உலகை சுற்றும் நிலவு போல்…அன்பே… உன்னை சுற்றுகிறேன் நான்!
❤ ✦ ❤
கணவன் — மூன்றாம் சரணம்
♬ கணவன் — Husband
கார்காலம்… நிசப்தமான பின்னிரவு…எங்கும் அடைமழையின் பாதச்சுவடுகள்…மழைத்துளிகளின் இன்னிசை கானம்…இவை அனைத்திலும் மனம் செலுத்தாமல்…என்னவளுக்காக ஏங்கும் நான்…உன்னை அடைய உருகிய கார்முகில்கள்…மாய்த்துக்கொண்டன இந்த மண்ணில்… மழைத்துளிகளாய்…ஒருதுளி மழையினால் பூக்கும் பூக்களைப்போல்…என் இதயமும் பூக்கிறது —உன் ஒருதுளி அன்பினால்…
மனைவி — நான்காம் சரணம்
♬ மனைவி — Wife
கார்கால பின்னிரவில்…புதிதாய் குளித்த சாலை தன்னில்…அன்பேனும் குடையின் கீழ்…நட்பேனும் உன் கைவிரல் கோர்த்து…நம் இருவர் பாதங்களும் ஒன்றாய் நீரினில் இசைத்து…பயணிப்பது என்றோ?ஜன்னல் ஓரம் மழைச்சாரல்…என் மடியில் புதைந்திருக்கும் உன்னை…இரசித்து கொண்டிருப்பதினால் என் இதயம் குளிர்கிறது…
❤ ✦ ❤
முக்தாயி — Muktayi
♬ இருவரும் — Together
வருடங்கள் பல காத்திருந்து…மாதங்கள் பல நேசித்து…நொடிகளில் மூன்று முடிச்சிட்டு…யுகங்கள் பல ஒன்றாய் வாழ…கரம் பிடித்தேன் உனை நான்…காலையில் பூத்த மலராக நீ…உன் மீது உறைந்திருக்கும் பனித்துளியாக நான்…என் காதல் தாகம் தணிந்தது…உன் அன்பேனும் மழைச்சாரலில்…
பல்லாவி — இறுதி
♬ இருவரும் — Together
மழைத்துளிகளில் உன் நினைவை தழுவிபொழிகிறது என் காதல்…கதிரவனாய் நீ… ஒளியாய் நீ…உலகாய்… உணர்வாய்… உயிராய் நீ…நீயின்றி நாம் இல்லை…நாம் இன்றி நானில்லை…என் காதல் மனைவியே… ❤