👁️ Collection

காதல் விழிகள்…

மழைக்காதலன் கவிதைகள்

← முகப்பு திரும்ப
நிலவில் இரு கயல் மோத கண்டேன்.. உன் விழிகளாய்…
· · ·
பகலவன் கண்ட பனித்துளிபோல் தகிக்கிறது உன் விழி கண்ட என் இதயம்…
· · ·
இருளின் சிறையில் நிலவுபோல் நிலவின் சிறையில் இருள் உன் விழிகள்…
· · ·
தொலைதூர நிலவும் கவர்ந்து செல்லும் என்பதனாலே உன்னை சிறைவைத்தேன் (என்)விழிகளாய் இமைகளுக்குள்…
· · ·
அதிகாலை மழைச்சாரலின் குளிரிலும் தகிக்கிறதென் இதயம்… உன் கயல்விழி பார்வையினால்…
· · ·
← தேடல்பயணங்கள் →